Friday, August 24, 2012

Facebook Photo Tag பிரச்சினையை தவிர்ப்பது எப்படி?






முகபுத்தகத்தில் சிலர் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று நமக்கு சம்மந்தமே இல்லாத புகைப்படங்களில் நம்மையும் இணைத்து விடுவது , இதனால் அந்த புகைப்படம் நாம் விரும்பாமலே நம் டைம் லைனில் வந்து நிற்கும். அத்தோடு அதற்கு வரும் அத்தனை கமெண்ட்களும் நமக்கு Notification ஆக வரும். இதை தவிர்க்கும் வழி பற்றியதே இன்றைய பதிவு.

நாம் சம்மந்த பட்ட புகைப்படங்கள் என்றால் பிரச்சனை இல்லை. வேறு ஏதாவது வில்லங்கமான (தவறான ) படமாக அது இருக்கும் பட்சத்தில் நம் நன் மதிப்பு பாதிக்கப்படும். நம்மை பற்றி ஒரு தவறான எண்ணத்தை நம் நட்பு வட்டத்தில் அது ஏற்படுத்தி விடும். இல்லாவிட்டாலும் நிறைய Notifications-கள் வரும், இதை தவிர்ப்பது நமக்கு நல்லது தானே? எப்படி என்று பார்ப்போம். 
முதலில் உங்கள் முகபுத்தகத்தில் Home க்குஅருகில் உள்ள அம்புக்குறி போன்ற சின்னத்தை சொடுக்குங்கள் உங்களுக்கு கீழ்கண்டவாறு ஒரு பக்கம் கிடைக்கும்.

அதில் Privacy Settings என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள் அதை தேர்வு செய்தவுடன் ஒரு பக்கம் தோன்றும் அதில் Timeline Tagging என்பதிற்கு நேரே உள்ள Edit Settings என்பதை தெரிவு செய்து கொள்ளுங்கள் .
பின்பு தோன்றும் பக்கத்தில் Review posts friends tag you in before they appear on your time line மற்றும் Review tags friends add to tour own posts on Facebook என்பதையும் Enable செய்து "ON" செய்து கொள்ளுங்கள்.


அவ்வளவு தான் இனி யார் உங்களை சேர்த்தாலும், மாட்டிவிட்டாலும் , வம்புக்கு இழுத்தாலும் உங்க அனுமதி வேண்டும் . அதாவது கீழ்கண்டவாறு நீங்கள் Approve செய்ய வேண்டும் பின்பு தான் உங்கள் Timeline இல்  அந்த போஸ்டுகள் வரும் .
ஆனால் எனது Wall-இல் போஸ்ட்களையும் பகிர்கிறார்கள்,அதற்கு என்ன செய்வது என்று கேட்பவர்களுக்கு இந்த பதிவு.

No comments:

Post a Comment